ஆக. 6 இல் டேக்வாண்டோ பயிற்சிக்கு வீரர்கள் தேர்வு

சேலத்தில் டேக்வாண்டோ விளையாட்டு வீரர்களுக்கான தினசரி சிறப்புப் பயிற்சிக்கான தேர்வு ஆகஸ்ட் 6-ஆம் தேதி

சேலத்தில் டேக்வாண்டோ விளையாட்டு வீரர்களுக்கான தினசரி சிறப்புப் பயிற்சிக்கான தேர்வு ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறுவதாக  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஆ.ஞானசுகந்தி தெரிவித்தார். 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சேலம் பிரிவு அலுவலகத்தின் மூலம் "டேலன்ட் ஹண்டிங் பயிற்சி முகாம்'' என்னும் திட்டத்தின் கீழ் டேக்வாண்டோ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தினசரி சிறப்புப் பயிற்சி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் அளிக்கப்பட உள்ளது. 
இது குறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஆ.ஞானசுகந்தி  வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இத்திட்டத்தின்படி 10 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் மற்றும் பள்ளியில் படிக்காத டேக்வாண்டோ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் உடற்திறனறிந்து, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், விளையாட்டு விடுதிகளில் சேரவும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான மாவட்ட அளவிலான தேர்வுகள் ஆகஸ்ட 6 ஆம் தேதி காலை 8 மணியளவில் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளின் மூலம் 10 வீரர்கள் மற்றும் 10 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட விளையாட்டுப் பிரிவு டேக்வாண்டோ பயிற்றுநர் மூலம் தினமும் மாலை சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுவார்கள். 
மேலும் இப்பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட தேக்வாண்டோ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சிற்றுண்டி, பயணப்படி, விளையாட்டு சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
இத்தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், தங்களது  வயதுச் சான்றிதழ் அல்லது பிறப்பு சான்றிதலுடன் (உண்மை சான்றிதழ்) வந்து தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com