சுடச்சுட

  

  சேலத்தில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஆக. 14) நடைபெற உள்ளதாக சேலம் கிழக்கு கோட்ட இயக்கமும்-பராமரிப்பும் பிரிவு செயற்பொறியாளர் கே.சி.சுந்தரி தெரிவித்தார்.
   சேலம் மின் பகிர்மான வட்டத்துக்குள்பட்ட கிழக்கு கோட்ட அலுவலகத்தில் மாதாந்திர குறைதீர் கூட்டம் புதன்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது. உடையாப்பட்டி காமராஜர் காலனியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கி.சண்முகம் பங்கேற்க உள்ளார்.
   எனவே, சேலம் மின்பகிர்மான வட்டம் கிழக்கு கோட்டத்தைச் சார்ந்த மின் நுகர்வோர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு மின்சாரம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai