சுடச்சுட

  

  கெங்கவல்லி அருகே வீரகனூரில் இரவுநேர ரோந்துப் பணியை தீவிரப்படுத்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
   வீரகனூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் பெரியசாமி, சண்முகம், தங்கராக, மாதேஸ்வரி, கணேசன், கணபதி ஆகியோர் பூக்கடை வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் சனிக்கிழமை இரவு தங்களது கடைகளை பூட்டி விட்டு சென்றனர். ஞாயிற்றுக்கிழமை காலையில் கடைகளைத் திறந்த போது, கல்லாப்பெட்டிகளிலிருந்து மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. அதே போல் வீரகனூர் பேருந்து நிலைய பொதுக் கட்டண கழிப்பறை குத்தகை எடுத்துள்ள ராஜேந்திரன் வசூல் செய்து வைத்து இருந்த ரூ.2 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
   இதுகுறித்து வீரகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, வீரகனூரில் இரவுநேர ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டுமென வீரகனூர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai