சுடச்சுட

  

  வாழப்பாடி பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் மழை வேண்டி பாப் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   வாழப்பாடியில் ஆத்துமேடு காமராஜ் நகர் பெரியாற்றின் கரையில் பழமையான பெரியாண்டிச்சியம்மன் கோயில் உள்ளது. வாழப்பாடி அக்ரஹாரம், புதுப்பாளையம், காமராஜ் நகர், ஏரிக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வசித்து வரும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பெரியாண்டிச்சியம்மனை மூதாதையரின் மறு உருவாக கருதி குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
   இக்கோயிலில், குலதெய்வப் பங்காளிகளின் சார்பில், வறட்சி நீங்கி மழை வேண்டி செவ்வாய்க்கிழமை "பாப் பூஜை' திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில், அம்மனுக்கு புத்தாடை அணிவித்து, மலர்மாலை அலங்காரம் செய்தும், பொங்கலிட்டு, ஆட்டுக்கிடா, சேவல் பலிகொடுத்தும் பக்தர்கள் வழிபட்டனர். பூஜை நிறைவடைந்து பக்தர்கள் வீடு திரும்பியதும், மாலையில் எதிர்பாராத விதமாக மழை பெய்ததால், பொதுமக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai