எஸ்.பாப்பாரப்பட்டியில் ரூ.6.28 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

சேலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில், ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாரப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சேலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில், ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாரப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான சென்னகிரி, பாப்பாரப்பட்டி, பாலம்பட்டி, பைரோஜி, இருசனாம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த 11,041 கிலோ எடையுள்ள பருத்திகளை சுமார் 323 மூட்டைகளில் ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.
 இதில் ஆத்தூர், எடப்பாடி, தேடாவூர், கொங்கணாபுரம் மற்றும் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். இதில் சுரபி வகையைச் சேர்ந்த பருத்தி குறைந்தபட்சமாக ஒரு கிலோ ரூ.59-க்கும், அதிகபட்சமாக ரூ.64.80-க்கும் விலை போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 68 ஆயிரத்தை 238-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com