குல தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி வட்டப் பகுதியில் உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் ஆடி 28-ஆம் நாளையொட்டி செவ்வாய்க்கிழமை குல தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

சங்ககிரி வட்டப் பகுதியில் உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் ஆடி 28-ஆம் நாளையொட்டி செவ்வாய்க்கிழமை குல தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
 ஆடி 28-ஆம் நாளையொட்டி சங்ககிரி, மகுடஞ்சாவடி, தேவூர், நெடுங்குளம், ஆலச்சம்பாளையம், புள்ளாகவுண்டம்பட்டி, காவேரிப்பட்டி, வடுகப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குடும்பத்துடன் குளித்து காவிரி கரையோரம் உள்ள அங்காளம்மனை வழிபட்டனர். மேலும், கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துச் சென்று பக்தர்கள் குலதெய்வ சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
 வடுகப்பட்டியில் விவசாயிகள், பக்தர்கள் ஒன்று கூடி மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், ஊர்க்காவல் தெய்வமான எல்லை முனியப்பன், கன்னிமார் சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், திருநீறு, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜைகள் செய்து குடும்பத்துடன் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் காவல் தெய்வமான எல்லை முனியப்பன் சுவாமிக்கு ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com