சுடச்சுட

  

  சேலத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கார்த்திக் (எ) கார்த்திகேயன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
   சேலம் நகரக் காவல் எல்லைக்குள்பட்ட பழைய பேருந்து நிலையம் ஆட்கொல்லி பாலத்தில் கடந்த ஜூலை 21 ஆம் தேதி நடந்து வந்த நபரை ஆட்டோவில் வந்த கார்த்திகேயன் (23) வழிமறித்து வீச்சரிவாளை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
   மேலும், அவரைக் காப்பாற்ற வந்த பொதுமக்களிடம் வீச்சரிவாளை காண்பித்து மிரட்டல் விடுத்தார். இதையடுத்து சேலம் நகரக் காவல்துறையினர், கார்த்திகேயனை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.கடந்த 2018 டிசம்பர் 9 ஆம் தேதி கன்னங்குறிச்சி காமராஜ் நகரில் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்மணி மற்றும் அவரது உறவினரைக் கத்தியைக் காட்டி மிரட்டி அரை பவுன் தங்க நகை, இரண்டு செல்லிடப்பேசிகள், பணம் ரூ.5,000 ஆகியவற்றை பறித்து சென்றார். மேலும், அங்கிருந்த நபர் வைத்திருந்த ரூ.1,500 பணம் மற்றும் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த கார்த்திகேயன், 2019 ஜூலை 13 ஆம் தேதி கன்னங்குறிச்சி ஏற்காடு பிரதான சாலையில் ஜோதிடர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த அரை பவுன் மோதிரத்தை பறித்துச் சென்றார். இதன்பேரில் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கார்த்திகேயனிடம் இருந்து நகை, பணம் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் கார்த்திகேயன் தன்னை திருத்தி கொள்ளாமல் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதைத்தொடர்ந்து துணை ஆணையர் பி.தங்கதுரையின் பரிந்துரையின் பேரில் கார்த்திகேயனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாநகரக் காவல் ஆணையர் த.செந்தில்குமார் உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai