சுடச்சுட

  

  சேலம் மாவட்டத்தில் 83.3 மி.மீ. மழை பெய்துள்ளது பதிவாகி உள்ளது.
   தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  மாலை நேரங்களில் மழை பெய்து வந்தது. செவ்வாய்க்கிழமை மாலையும் மாவட்டத்தில் பரவலாக மழைபெய்தது. இதனால்அஸ்தம்பட்டி,அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், கொண்டலாம்பட்டி,சூரமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாயினர்.மேலும் புதன்கிழமை மாலையும் மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது.
   மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): ஆணைமடுவு - 49, சேலம் - 24.3, காடையாம்பட்டி - 4, பெத்தநாயக்கன்பாளையம் - 3, ஏற்காடு - 2, ஆத்தூர் - 1.4 என மாவட்டத்தில் 83.3 மி.மீ மழை பதிவாகி உள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai