சுதந்திர தினத்தையொட்டி ரயிலில் வெடிகுண்டு சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீஸார் புதன்கிழமை வெடிகுண்டு சோதனை செய்தனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீஸார் புதன்கிழமை வெடிகுண்டு சோதனை செய்தனர்.
 நாடு முழுவதும் சுதந்திர தினம் வியாழக்கிழமை (ஆக.15)  கொண்டாடப்படுவதை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 அந்த வகையில் சேலத்திலும் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 சேலம் மாநகரப் பகுதியில் காவல் ஆணையர் த.செந்தில்குமார் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் புதன்கிழமை மாலையிலிருந்தே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலும் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை காலை சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ஜங்ஷன் வந்தபோது சேலம் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் ரயிலில் ஏறி மெட்டல் டிடெக்டர் கருவியைக் கொண்டு சோதனை செய்தனர். பின்னர் போலீஸார் ரயில் நிலையம் முழுவதும் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com