சேலம் விமான நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சேலம் விமான நிலையத்தில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சேலம் விமான நிலையத்தில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 விமான நிலைய பாதுகாப்புப் படை போலீஸாருடன் சேலம் மாவட்ட போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 சேலம் மாவட்டம், ஓமலூர் காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த இந்த விமான நிலையம் கடந்த இரு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது ட்ரூஜெட் விமான போக்குவரத்து நிறுவனம் மூலம் சேலம் -சென்னைக்கு விமானப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சேலம் விமான நிலையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் சுதந்திர தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், சேலம் விமான நிலையத்துக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சேலம் விமான நிலைய பாதுகாப்புப் பணியில் 52 போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சேலம் மாவட்ட போலீஸார் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்திலும் சுதந்திர தினவிழா கொடியேற்றி கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், விமான நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com