குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் முயற்சி: விவசாயிகள் எதிர்ப்பு

கல்பாரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பொதியங்குட்டையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் புதன்கிழமை முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கல்பாரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பொதியங்குட்டையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் புதன்கிழமை முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 இளம்பிள்ளை அருகே கஞ்சமலை அடிவாரம், சடையாண்டி ஊற்று அருகே கல் பாரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பொதியங்குட்டை உள்ளது.
 இப் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் திட்டத்தின் கீழ் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 20 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
 இதையடுத்து புதன்கிழமை காலை அப் பகுதியில் நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் வந்தனர்.
 தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கோட்ட பொறியாளர் செங்கோடன், உதவி பொறியாளர்கள் சுதாகரன், தமிழரசி, கல்பரப்பட்டி விஏஓ பிருந்தா பெரிய சீரகபாடி வி.ஏ.ஓ. சங்கீதா, ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் குலசேகரன் ஆகியோர் நிகழ்விடத்தை பார்வையிட்டு அளவீடு செய்ய இருந்தனர்.
 அப்போது அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கூறியதாவது:
 இங்கு மூன்று தலைமுறைகள் தண்டத் தீர்வு செலுத்தி விவசாயம் செய்து வந்தனர். அதில் சீதா, கொய்யா, பனை, தென்னை மற்றும் பல வகை செடிகளும், காய்கறிகளும், ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வந்தனர்.
 அவ் விடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு நிலம் கையக்கபடுத்த முயன்றால் எங்களுக்கு உரிய இடத்தை ஒதுக்கீடு செய்து விட்டு திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று கோரிக்கை வைத்தனர்.
 மேலும் அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து இக் கோரிக்கையை விடுத்தனர். மேலும் இதுதொடர்பாக முதல்வரின் சிறப்புக் குறைதீர் திட்டத்தில் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
 பொது மக்களை சமரசப்படுத்திய அதிகாரிகள், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடுமாறு தெரிவித்தனர். இச் சம்பவத்தால் நிள அளவீடு பணி பாதிப்படைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com