Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் காட்டுயிர் புகைப்படக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காட்டுயிர் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    தமிழ்நாடு அறிவியல் இயக்க பெத்தநாயக்கன்பாளையம் கிளை மற்றும் சேலம் இயற்கை வனவாழ் அறக்கட்டளை இணைந்து நடத்திய காட்டுயிர் புகைப்படக் கண்காட்சி கிளைத் தலைவர் ஜெயப் பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.

    செயலாளர் ராஜாங்கம் வரவேற்றுப் பேசினார். தலைவாசல் கிளை சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.  
    மாவட்ட அறிவியல் இயக்க துணைத் தலைவர் சுரேஷ், சேலம் இயற்கை வனவாழ் அறக்கட்டளை நிர்வாகி முருகேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
    இக்கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட பறவைகள்,  பாம்புகள், வண்ணத்துப் பூச்சிகள், வனவிலங்குகளின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ,மாணவியர், ஆசிரியர்கள் மறறும் பெற்றோர்கள் புகைப்படக் கண்காட்சியைக் கண்டு களித்தனர். கிளை பொருளாளர் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai