Enable Javscript for better performance
தாரமங்கலத்தில் ரத்த தான முகாம்: 632 பேர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தாரமங்கலத்தில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் 632  பேர் ரத்த தானம் செய்தனர். 
    வேதாத்திரி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த ரத்த தான முகாமை அறிவுத் திருக்கோயில் தலைவர் ஏ.சாரங்கலிங்கம் தொடங்கி வைத்தார். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், இளைஞர்களிடம் இருந்து ரத்தத்தை தானமாகக் பெற்றுக் கொண்டனர். இதில் தாரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த 632 இளைஞர்கள் பங்கேற்று தலா ஒரு யூனிட் ரத்தத்தை சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை ரத்த வங்கித் தலைவர் மருத்துவர் ஆர்.ரவீந்தர், தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பத்மா, வேதாத்திரி இளைஞர் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் டி.பி.எஸ்.வடிவேல்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai