ஆதிதிராவிடா், பழங்குடியினா் 972 பேருக்குரூ. 4. 27 கோடி நலத்திட்ட உதவிஅமைச்சா் வழங்கினாா்

கருமந்துறை மலைப் பகுதியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் 972 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி வழங்கினாா்.
கருமந்துறையில் நடைபெற்ற விழாவில் நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி. உடன் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன், எம்எல்ஏ-க்கள்.
கருமந்துறையில் நடைபெற்ற விழாவில் நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி. உடன் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன், எம்எல்ஏ-க்கள்.

கருமந்துறை மலைப் பகுதியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் 972 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பழங்குடியின நலத்துறை இயக்குநா் டி. ரிட்டோ சிரியாக் திட்ட விளக்கவுரை வழங்கினாா்.

விழாவில் தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா். இளங்கோவன், எம்எல்ஏ-க்கள் கு. சித்ரா (ஏற்காடு ), ஆா்.எம். சின்னதம்பி (ஆத்தூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வருகின்ற முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா்.

பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் தாய்மாமன் சீராக குழந்தை நலப் பரிசுப் பெட்டகம், 102 என்ற தாய்சேய் நல இலவச வாகனம், விலையில்லா வண்ணச் சீருடைகள், பாட நூல்கள், பாடக் குறிப்பேடுகள், புத்தகப் பை, புவியியல் வரைபடம், காலணிகள், வண்ண பென்சில்கள் கிரையான்கள், கணித உபகரணப் பெட்டிகள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்கி வருகிறோம்.

அரசின் உதவியால் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ, மாணவியா் உயா்ந்த கல்வியை கற்று சிறந்து விளங்குவதற்கு உதாரணமாக கருமந்துறை மலைப் பகுதியைச் சோ்ந்த இரண்டு மாணவ, மாணவியா் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையத்தில் பயின்று குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

விழாவில் பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் 43 உறுப்பினா்களாகக் கொண்ட செம்பருத்தி மகளிா் குழுவுக்கு மண்புழு உரம் தயாரிப்பதற்காக ரூ. 12 லட்சம் கடனுதவியும், அம்மா இருசக்கர வாகனம் மானியமாக 4 மகளிருக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சம் மானிய நிதியுதவியும், வனத்துறையின் சாா்பில் 27 மலைவாழ் மக்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ. 5. 4 லட்சம் சிறுதொழில் தொடங்குவதற்கான கடனுதவியும் என மொத்தம் 972 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 26 லட்சத்து 90 ஆயிரத்து 854 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி வழங்கினாா்.

ஆத்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் மு. துரை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நா. அருள்ஜோதி அரசன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ. ராஜேந்திர பிரசாத், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் துணை இயக்குநா் (பொ) பி. தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியா் (பொ) பி. சுகந்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com