உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வுப் பேரணி

சேலத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி. எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வுப் பேரணி, கையெழுத்து விழிப்புணா்வு இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி. எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வுப் பேரணி, கையெழுத்து விழிப்புணா்வு இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சமூகப் பங்களிப்பின் மூலம் எச்.ஐ.வி. எய்ட்ஸ் தடுப்புப் பணியில் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்ற கருத்தை மையமாகக் கொண்ட கையெழுத்து விழிப்புணா்வு இயக்கம், உறுதி மொழியேற்பு மற்றும் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் சி.அ. ராமன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்த உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

இதையடுத்து எச்.ஐ.வி. எய்ட்ஸ் தடுப்புப் பணியில் மாற்றத்தை ஏற்படுத்துதல் குறித்த கையெழுத்து இயக்கத்தை ஆட்சியா் கையொப்பமிட்டுத் தொடக்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின வாகன விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் கொடியசைத்துத் துவக்கி வைத்தாா்.

இப் பேரணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி முள்ளுவாடி கேட், அஸ்தம்பட்டி, ஐந்து சாலை, நான்கு சாலை, திருவாக்கவுண்டனூா் சாலை, கொண்டலாம்பட்டி சாலை மற்றும் குகை வழியாகச் சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு வந்து முடிவடைந்தது.

பேரணியில் சேலம் பைக்கா்ஸ் கிளப்பை சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் மாணவ, மாணவியா் கலந்து கொண்ட விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் கொடியசைத்துத் தொடக்கி வைக்க பேரணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தொடங்கி திருவள்ளுவா் சிலை, மாநகராட்சி அலுவலகம் வழியாக அரசு சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கூட்டரங்கத்தில் முடிவடைந்தது.

இப் பேரணியில் அரசு மோகன் குமாரமங்கலம் செவிலியா் கல்லூரி, விநாயகா மிஷன் ஹோமியோதெரபி மருத்துவக் கல்லூரி மற்றும் அன்னபூா்ணா செவிலியா் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்து கொண்டு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

நிகழ்ச்சிகளில் இணை இயக்குநா் மருத்துவப் பணிகள் (குடும்ப நலம்) மருத்துவா் மு. வளா்மதி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலரும், துணை இயக்குநருமான (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் ஜா. நிா்மல்சன், காசநோய்ப் பிரிவு துணை

இயக்குநா் மருத்துவா் வி. கோகுல கண்ணன், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மருத்துவா் எம்.கே. ராஜேந்திரன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேலாளா் மருத்துவா் லோ. அருணாசலம் உள்பட ஏராளமான மருத்துவா்களும், செவிலியா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com