11 மாதங்களில் 51, 825 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: ஆணையாளா்

சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் கடந்த 11 மாதங்களில் 4 ஆயிரத்து 633 கடைகளில் 51 ஆயிரத்து 825 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்து, ரூ. 37 லட்சத்து 70 ஆயிரத்து 220 அபராத

சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் கடந்த 11 மாதங்களில் 4 ஆயிரத்து 633 கடைகளில் 51 ஆயிரத்து 825 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்து, ரூ. 37 லட்சத்து 70 ஆயிரத்து 220 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் தெரிவித்தாா். இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் ஆணைப்படி கடந்த ஜனவரி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதை மற்றும் விற்பனை செய்வதைத் தடுக்க, சேலம் மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் 5 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடா் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், ஜனவரி 2-ஆம் தேதி முதல் நவம்பா் 30-ஆம் தேதி வரையிலான 11 மாதங்களில், சூரமங்கலம் மண்டலத்தில் 1,049 கடைகளில் 38 ஆயிரத்து 947 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்து ரூ. 14 லட்சத்து 83 ஆயிரத்து 100 அபராதமும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 944 கடைகளில் 2 ஆயிரத்து 122 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்து ரூ. 7 லட்சத்து 90 ஆயிரத்து 50 அபராதமும், அம்மாபேட்டை மண்டலத்தில் 1311 கடைகளில் 8 ஆயிரத்து 54 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்து ரூ. 8 லட்சத்து 97 ஆயிரத்து 550 அபராதமும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 1,329 கடைகளில் 2 ஆயிரத்து 702 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்து ரூ. 5 லட்சத்து 99 ஆயிரத்து 520 அபராதம் என 4 மண்டலங்களிலும் மொத்தம் 4 ஆயிரத்து 633 கடைகளில் 51 ஆயிரத்து 825 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளா்களிடமிருந்து ரூ. 37 லட்சத்து 70 ஆயிரத்து 220 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்வதற்கும், சிமென்ட் தொழிற்சாலையில் பயன்படுத்துவதற்கும் மற்றும் ஊரகப் பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இக் கண்காணிப்புக் குழுவினா் தினந்தோறும் மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை மற்றும் விற்பனை செய்வதைத் தடுக்க, தொடா்ந்து தணிக்கை மேற்கொள்வாா்கள் என்று ஆணையாளா் ரெ. சதீஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com