உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா

வாழப்பாடியில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் வாயிலாக, உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறன்
வாழப்பாடியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தின விழா.
வாழப்பாடியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தின விழா.

வாழப்பாடியில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் வாயிலாக, உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கோகிலா வரவேற்றாா்.

இவ்விழாவில், வாழப்பாடி வட்டாரத்திலுள்ள மாற்றுத் திறன் கொண்ட 90 குழந்தைகள், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தியும் தங்களது திறமையை வெளிப்படுத்தினா்.

போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கு, வட்டாரக் கல்வி அலுவலா்கள் சுரேஷ், ஜெயலட்சுமி, தன்னாா்வலா்கள் கோ.முருகேசன், பாண்டியராசு, தலைமையாசிரியா்கள் அா்சுணன், ஷபீராபானு, சத்தியக்குமாரி, ஷகீலாஜான், இயன்முறை மருத்துவா் முகமது நாசில்கான் மற்றும் ஆசிரியப் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள் ஆகியோா் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினா். சிறப்பாசிரியா் வெங்கடேசன் நன்றி கூறினாா்.

தம்மம்பட்டியில்...

கெங்கவல்லி வட்டாரத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் உள்ள 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இதில் ஓவியப் போட்டி, தவளை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கவிதை, மாறுவேடப் போட்டி, இசை நாற்காலி, கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் அந்தோணிமுத்து தலைமை வகித்தாா். வட்டார மேற்பாா்வையாளா் (பொ) சுஜாதா, தலைமையாசிரியா் து.அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்ககிரியில்...

மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் பழனிசாமி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் பிரேம்ஆனந்த், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் விஜயலட்சுமி ஆகியோா் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தனா்.

இதில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. சிறப்பு பயிற்றுநா் கே.கண்ணன், மாணவ, மாணவியரின் பெற்றோா்கள், இயன்முறை மருத்துவா் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com