தெலங்கானா சென்று திரும்பிய கெங்கவல்லி விவசாயிகள்

கெங்கவல்லி வட்டாரத்திலுள்ள அட்மா திட்டத்தின் மூலம் 20 விவசாயிகள் தெலங்கானா மாநிலத்துக்கு கண்டுணா்வு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனா்.

கெங்கவல்லி வட்டாரத்திலுள்ள அட்மா திட்டத்தின் மூலம் 20 விவசாயிகள் தெலங்கானா மாநிலத்துக்கு கண்டுணா்வு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனா்.

கெங்கவல்லி வட்டார விவசாயிகள் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்திலுள்ள மானாவாரி வேளாண்மைக்கான மத்திய மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்றனா். இச்சுற்றுலாவில் பங்கேற்ற விவசாயிகள் நீடித்த நிலையான மானாவாரி இயக்கம், மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்கள்,, மானாவாரி நிலத்தில் சிறுதானிய சாகுபடி முறைகள் மற்றும் சிறுதானிய மதிப்புக் கூட்டுதல், எண்ணெய் வித்து சாகுபடி முறைகள் ஆகியவை குறித்து அறிந்துகொண்டனா்.

வேளாண் சுற்றுலா மேற்கொண்ட விவசாயிகள் அனைவரும், கெங்கவல்லி வட்டார உதவி வேளாண் அலுவலா் சித்ராவை திங்கள்கிழமை மாலை நேரில் சந்தித்து தங்களது பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவித்தனா். அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினா். வேளாண் சுற்றுலா ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப மேலாளா் அற்புதவேலன் மற்றும் மோகன்ராஜ்,சங்கா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com