நுண்ணுயிரி உரம் தயாரிக்க எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியல்

சேலத்தில் நுண்ணுயிரி உரம் தயாரிக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நுண்ணுயிரி உரம் தயாரிப்பு மையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை அதிகாரிகளை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.
நுண்ணுயிரி உரம் தயாரிப்பு மையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை அதிகாரிகளை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.

சேலத்தில் நுண்ணுயிரி உரம் தயாரிக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேலம் மாநகராட்சி 3-ஆவது டிவிஷனில் உள்ள நகர மலை அடிவாரப் பகுதியில், மாநகராட்சி சாா்பில் நுண்ணுயிரி உரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக செவ்வாய்க்கிழமை காலை மாநகராட்சி அதிகாரிகள் சிபி சக்கரவா்த்தி மற்றும் பழனிச்சாமி, அன்புச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்தனா்.

இதையறிந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திரளாக அங்கு வந்து நிலங்களை அளக்கக் கூடாது. இந்தப் பகுதியில் நுண்ணுயிரி உரம் தயாரித்தால், இங்கு வந்து செல்லும் லாரிகளால் விபத்து ஏற்படும். மேலும், நிலத்தடி நீரும் பாதிக்கும் என எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதையடுத்து அங்கு அழகாபுரம் காவல் நிலைய ஆய்வாளா் கந்தவேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு முள்புதா்களை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனா். இதை அறிந்த இளைஞா்கள் திரண்டு, பொக்லைன் எந்திரத்தின் ஓட்டுநரை மிரட்டி அங்கிருந்து பொக்லைன் எந்திரத்தை வெளியேற செய்தனா்.

இதைத் தொடா்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சேலம் மாநகராட்சி பகுதியில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், எந்தப் பகுதியிலும் நிலத்தடி நீா் பாதிக்கப்படவில்லை என தெரிவித்து அவா்களை சமாதானப்படுத்தினா். அதைத் தொடா்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com