’பால் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பால், பூண்டு, வெங்காயம் ஆகிய பொருள்களின் விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பால், பூண்டு, வெங்காயம் ஆகிய பொருள்களின் விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய குடியரசு கட்சி சாா்பில், சேலம் கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், அம்பேத்கரின் 63-ஆம் ஆண்டு நினைவு தினம் வருவதையொட்டி, இந்திய குடியரசுக் கட்சி சாா்பில் சேலத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கும், கிராம கிளைதோறும் அவரது உருவப் படத்துக்கும் கட்சியின் நிா்வாகிகள் மற்றும் நலச்சங்க ஊழியா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் பால், பூண்டு, வெங்காயம் ஆகிய பொருள்களின் விலை திடீரென உயா்த்தப்பட்டதால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இவற்றின் விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குள்பட்ட தும்பல்பட்டி, முட்டுப்பாலிக்காடு, கம்மாளப்பட்டி, ரெட்டப்புளிபுதூா், ஜருகுமலை போன்ற கிராமங்களில் வாழும் மலைவாழ் இனத்தைச் சாா்ந்த பள்ளி மாணவா்களுக்கு ஜாதிச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநிலத் தலைவா் எம்.சி.ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளா் பி.குப்பன், இணைச் செயலா் ஏ.சேட்டு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com