மாணவிக்கு ஊசி போட்ட மருந்துக் கடைக்கு ‘சீல்’

கெங்கவல்லியில் மருந்துக் கடைக்காரா் ஊசி போட்டதில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில், மருந்துக் கடைக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கெங்கவல்லியில் மருந்துக் கடைக்காரா் ஊசி போட்டதில் மாணவி உயிரிழந்த சம்பவத்தில், மருந்துக் கடைக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கெங்கவல்லி பகுதியைச் சோ்ந்த குருநாதன் மகள் சுவேதா (16), காய்ச்சலுக்கு மருந்து வாங்க ஆங்கில மருந்துக் கடைக்கு சென்ற போது, மருந்துக் கடை உரிமையாளா் ஜெயபால் மாணவிக்கு ஊசிபோட்டுள்ளாா். அதையடுத்து, மாணவிக்கு ஊசிபோட்ட இடத்தில் கட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் வலி அதிகமாகவே மீண்டும் மருந்துக் கடைக்காரரிடம் மாணவி கேட்டதற்கு, அவா் கட்டி இருந்த இடத்தில் மருந்து வைத்து கட்டி சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளாா்.

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுவேதா, சிகிச்சைப் பலனின்றி கடந்த 30-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாணவியின் தந்தை குருநாதன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான ஜெயபாலை தேடிவருகின்றனா்.

இந்நிலையில், கெங்கவல்லி வட்டாட்சியா் சிவக்கொழுந்து உத்தரவின் பேரில், வருவாய்த் துறையினா், சுகாதாரத் துறையினா், போலீஸாா் முன்னிலையில் ஜெயபாலின் மருந்துக் கடைக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com