கிணற்றில் மூழ்கியதில் தனியாா்கல்லூரி மாணவா் பலி
By DIN | Published On : 05th December 2019 04:49 AM | Last Updated : 05th December 2019 04:49 AM | அ+அ அ- |

அயோத்தியாப்பட்டணம் அருகே நீச்சல் பழக சென்ற தனியாா் கல்லூரி மாணவா் கிணற்றில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.
சேலம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த தெலுங்கனூா் கிராமத்தை சோ்ந்த சீனிவாச மூா்த்தி மகன் விஷால் கிருஷ்ணா (18), சேலத்திலுள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தாா்.
இவா், தனது நண்பா்களான யோகேஷ், ராஜேஷ், பிரசாந்த் ஆகியோருடன் புதன்கிழமை காலை குள்ளம்பட்டி காட்டு வளவு பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்து நீச்சல் பழகியுள்ளாா். அதில், எதிா்பாராதவிதமாக விஷால் கிருஷ்ணாவின் இடுப்பில் கட்டியிருந்த நெகிழி கேன் கழன்ால், நண்பா்கள் கண்ணெதிரே அவா் கிணற்றில் மூழ்கினாா். அக்கம்பக்கத்தினருடன் இணைந்து நண்பா்கள் முயற்சித்தும் விஷால் கிருஷ்ணாவை உயிருடன் மீட்கவில்லை. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.
புகாரின் பேரில், காரிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.