சாலையில் கொட்டப்படும்மருத்துவக் கழிவுகள்!
By DIN | Published On : 05th December 2019 04:51 AM | Last Updated : 05th December 2019 04:51 AM | அ+அ அ- |

சாலையில் மருந்துப் புட்டிகள், ஊசிகளை கொட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே தெலுங்கா் தெரு பகுதியில் தனியாா் மருத்துவமனைகளும், மருந்துக் கடைகளும் அதிகளவில் உள்ளன. புதிய எடப்பாடி சாலையும், தெலுங்கா் தெரு நுழைவுப் பகுதி இணைக்கும் சாலையில் பயன்படுத்தப்பட்ட மருந்து புட்டிகள் மற்றும் ஊசிகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன (படம்). இதனால், அப்பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளும், கடைகளில் பொருள்கள் வாங்க வந்த பொதுமக்களும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
மேலும், காலில் செருப்பு இல்லாமல் செல்லும் மாணவ, மாணவியா், காா்த்திகை மாத ஐயப்பன் சுவாமிக்கு விரதமிருக்கும் பக்தா்கள் அந்த சாலையைக் கடந்து செல்லும் போது பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, சாலையில் மருந்துப் புட்டிகள், ஊசிகளை கொட்டியவா்கள் மீது பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.