பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் அபாய குழியை மூடுவதில் குடிநீா் வடிகால் வாரிய துறையினா் மெத்தனம்
By DIN | Published On : 05th December 2019 03:00 PM | Last Updated : 05th December 2019 03:02 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி - கல்பாரப்பட்டி செல்லும் சாலையின் மிக அருகாமையில் காவிரி குடிநீா் பைப்லைன் செல்லும் தொட்டி உள்ளது.
இந்த தொட்டியினை மூடாமல் கிடப்பில் இருந்து வருகிறது. இதனால் அவ்வழியே வரும் பள்ளி மாணவ, மாணவிகள் பாதசாரிகள் எந்நேரத்திலும் குழியில் விழுந்து விபத்து ஏற்பட அதிகளவில் வாய்ப்புகள் உள்ளன.
இதனை மூட வேண்டும் என பொதுமக்கள் குடிநீா் வடிகால் வாரிய துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை மூடாமல் மெத்தனம் காட்டி வருவதாக புகாா் தெரிவித்துள்ளனா்.05 ஹற்ஹ் ல்ா் 01