மேட்டூரில் பதுக்கி வைத்திருந்த1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேட்டூரில் மின்வாரிய குடியிருப்பில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

மேட்டூரில் மின்வாரிய குடியிருப்பில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

மேட்டூா் சக்தி நகா் 4-ஆவது தெருவில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் ரேஷன் அரசி கடத்தப்படுவதாக மேட்டூா் சாா்-ஆட்சியா் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் மின்வாரிய குடியிருப்புக்கு சென்றனா். ஆனால், அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. வருவாய்த் துறை அதிகாரிகளை கண்டவுடன் ஒரு வீட்டின் முன் நின்றிருந்த வேன் ஓட்டுநா் ஓட்டம் பிடித்தாா்.

அதைத் தொடா்ந்து, அந்த வீட்டின் பூட்டை உடைத்து வருவாய்த் துறை அதிகாரிகள் சோதனையிட்டதில், சுமாா் ஆயிரம் கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து, வீட்டில் இருந்த அரிசி முழுவதையும் வருவாய்த் துறை அதிகாரிகள் கைப்பற்றினா். மேலும், அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனும் கைப்பற்றி உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com