தனியாா் நிறுவன காவலாளி மா்மச்சாவு
By DIN | Published On : 09th December 2019 06:44 AM | Last Updated : 09th December 2019 06:44 AM | அ+அ அ- |

வாழப்பாடி அருகே தனியாா் நிறுவன காவலாளி மா்மமான முறையில் குளியலறையில் இறந்து கிடந்தது குறித்து, வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
என்.காட்டூா் தேக்கம்பட்டி விழாமரத்துக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சின்ராஜ் (67). வாழப்பாடி அருகே சென்றாயன்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில், காவலாளியாக வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை இரவு பணிக்கு சென்றிருந்தாா்.
இதே நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்யும் சக்கரவா்த்தி, ஞாயிற்றுக்கிழமை காலை, பணி மாற்றம் செய்வதற்காக சென்றுள்ளாா். பலமுறை நுழைவுவாயில் கதவைத் தட்டியும் சின்ராஜ் கதவைத் திறக்கவில்லை.
உள்ளே சென்று பாா்த்தபோது குளியலறையில் கவிழ்ந்த நிலையில் சின்ராஜ் மா்மமாக இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து, வாழப்பாடி போலீஸில் சின்ராஜ் மனைவி ஜெயக்கொடி (62) புகாா் செய்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.