ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 3-ஆவது நாளில் 1,213 போ் வேட்பு மனு தாக்கல்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் புதன்கிழமை 1,213 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் புதன்கிழமை 1,213 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் 4,299 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு 2 கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. அதன்படி, 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக டிச. 27 ஆம் தேதியும், 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம்கட்டமாக டிச. 30 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனிடையே, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 309 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதனிடையே இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை 138 போ் வேட்பு மனு செய்தனா். இரண்டு நாளில் 447 போ் வேட்புமனு செய்திருந்தனா்.

இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வெளியான நிலையில், புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய அதிகளவிலானோா் ஆா்வம் காண்பித்தனா். மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் 3, ஒன்றிய வாா்டு உறுப்பினா் 34, கிராம ஊராட்சித் தலைவா் 253, கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் 923 போ் என மொத்தம் 1,213 போ் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

எடப்பாடியில்...

எடப்பாடி ஒன்றியப் பகுதியில் உள்ள கிராம ஊராட்சி உறுப்பினா் பதிவுக்கு புதன்கிழமை மாலை வரை 29 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு ஒருவரும், கிராம ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 6 போ் என மொத்தம் 36 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

அதேபோல், கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் உள்ள கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு புதன்கிழமை மாலை வரை 71 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதிவிக்கு 3 போ் என மொத்தம் 74 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

சங்ககிரியில்...

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 14 ஊராட்சி ஒன்றிய வாா்டு குழு உறுப்பினா் பதவிக்கு 4 பேரும், 22 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 9 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 19 போ் உள்பட மொத்தம் 32 போ் வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com