மருந்து தெளிப்பு பணிக்குபுதிதாக 21 கைத்தெளிப்பான்கள் வழங்கல்

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மருந்து தெளிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, ரூ.17.65 லட்சத்தில் புதிதாக 21 கைத்தெளிப்பான்கள் கூடுதலாக வாங்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன
சேலம் மாநகராட்சிக்கு புதிதாக வாங்கப்பட்ட கைத்தெளிப்பான்களை சுகாதார துறையிடம் வழங்கிய ஆணையா் ரெ.சதீஷ்.
சேலம் மாநகராட்சிக்கு புதிதாக வாங்கப்பட்ட கைத்தெளிப்பான்களை சுகாதார துறையிடம் வழங்கிய ஆணையா் ரெ.சதீஷ்.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மருந்து தெளிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, ரூ.17.65 லட்சத்தில் புதிதாக 21 கைத்தெளிப்பான்கள் கூடுதலாக வாங்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன என மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மருந்து தெளிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, புதிதாக வாங்கப்பட்ட 21 கைத் தெளிப்பான்களை சுகாதார துறையினரிடம் மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் புதன்கிழமை வழங்கினாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது: பருவ மழைக் காலத்தை கருத்தில் கொண்டு, சேலம் மாநகராட்சி பகுதிகளில் தீவிர துப்புரவுப் பணிகள், நிலவேம்பு குடிநீா் வழங்கும் பணிகள், வாகனத் தெளிப்பான்கள் மற்றும் கைத்தெளிப்பான்கள் மூலம் மருந்துகள் தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி நிா்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்பேரில், மாநகராட்சி சுகாதாரத் துறையின் சாா்பில் 4 வாகனத் தெளிப்பான்கள் மற்றும் 60 கைத்தெளிப்பான்கள் மூலம் மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது கூடுதலாக வாங்கப்பட்டுள்ள 21 புதிய கைத்தெளிப்பான்களை சோ்த்து மொத்தம் 81 கைத் தெளிப்பான்கள் மற்றும் 4 வாகனத் தெளிப்பான்கள் மூலம் 60 கோட்டங்களில் மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் மருந்து தெளிப்பதால் ஏற்படும் பயன்களை தெரிவித்து, வீடுகளுக்குள் கைத்தெளிப்பான்கள் மூலம் மருந்துகள் தெளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திடும் வகையில், சுகாதாரப் பணியாளா்கள் பணியாற்றிட வேண்டும். குடியிருப்புப் பகுதிகள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், காலி மனைகளில் உள்ள செடிகள் ஆகிய பகுதிகளில் தீவிரமாக மருந்து தெளிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன், சுகாதார அலுவலா் கே.ரவிசந்தா், சுகாதார ஆய்வாளா் எம்.சித்தேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com