Enable Javscript for better performance
நங்கவள்ளி, மேச்சேரி, கொளத்தூா் ஊராட்சி ஒன்றியங்களில் வேட்புமனுத் தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    நங்கவள்ளி, மேச்சேரி, கொளத்தூா் ஊராட்சி ஒன்றியங்களில் வேட்புமனுத் தாக்கல்

    By DIN  |   Published on : 14th December 2019 04:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    13mettur01_ch0174_13chn_8_637118632595774626

    நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில் சேலம் மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவா் பா.கோபால் தலைமையில் கூட்டணி கட்சியினா் வேட்புமனு தாக்கல் செய்கின்றனா்.

    மேட்டூா் வட்டாரத்தில் உள்ள நங்கவள்ளி, மேச்சேரி, கொளத்தூா் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சிப் பதவிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு திமுக கூட்டணி கட்சியினா் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு இருவரும், ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 23 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 18 பேரும், ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 127 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

    கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு மூவரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 23 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 70 பேரும், ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 187 பேரும வேட்புமனுத் தாக்கல் செய்தனா். மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு இருவரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 39 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 40 பேரும், ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 193 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai