Enable Javscript for better performance
பதிவேடுகளை சரியாகப் பராமரிக்காத உதவிக் காவல் ஆய்வாளா் பணியிட மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பதிவேடுகளை சரியாகப் பராமரிக்காத உதவிக் காவல் ஆய்வாளா் பணியிட மாற்றம்

    By DIN  |   Published on : 14th December 2019 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கெங்கவல்லி காவல் நிலையத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது முக்கிய பதிவேடுகளை சரிவர பராமரிக்காத உதவிக் காவல் ஆய்வாளரைப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

    கெங்கவல்லி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் வெள்ளிக்கிழமை வருடாந்திரஆய்வு மேற்கொண்டாா். காவல் நிலைய செயல்பாடுகள், விசாரணையில் உள்ள வழக்குகள்,தேடப்படும் குற்றவாளிகள்,உள்ளாட்சித் தோ்தல் பணி ஒதுக்கீடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அப்போது காவல் நிலையத்துக்கு தேவையான முக்கிய பதிவேடுகளை கெங்கவல்லி உதவிக் காவல் ஆய்வாளா் முருகேசன் பராமரிக்கவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, முருகேசனை எஸ்.பி. தீபா கனிகா், சேலம் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai