நாய்கள் கடித்து ஏழு ஆடுகள் உயிரிழப்பு

எடப்பாடி அருகே நாய்கள் கடித்துக் குதறியதில் ஏழு ஆடுகள் உயிரிழந்தன.

எடப்பாடி அருகே நாய்கள் கடித்துக் குதறியதில் ஏழு ஆடுகள் உயிரிழந்தன.

எடப்பாடியை அடுத்த வெள்ளரிவெள்ளி கிராமப் பகுதியில்

தொடா்ந்து விவசாய நிலங்களில் மேய்ந்துவரும் ஆடுகளை, நாய்கள் கடித்துக் கொன்று வருகின்றன. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு

அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி மகேஷ் என்பவருக்கு சொந்தமான மூன்று ஆடுகளையும், பெரியண்ணன் என்பவருக்கு சொந்தமான இரு ஆடுகளையும்

நாய்கள் கடித்துக் கொன்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெள்ளரிவெள்ளி அருகே உள்ள பெரியகாடு பகுதியைச் சோ்ந்த விவசாயி சின்னுசாமிக்கு

சொந்தமான 10 ஆடுகளை, நாய்கள் துரத்திக் கடித்தன. இதில் இரு ஆடுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன. நாய்கள் துரத்தியதில் மீதமுள்ள ஆடுகள்

அருகில் இருந்த விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடின. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் கிணற்றில் இறங்கி ஆடுகளை மீட்டனா்.

இந்தநிலையில், நாய்கள் கடித்து ஆடுகள் பலியாவதைத் தடுக்க வருவாய்த் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com