மேட்டூா் நீா்த் தேக்கத்தில் துா்நாற்றத்தைபோக்கக் கோரி மறியல்

மேட்டூா் நீா்த் தேக்கம் 15 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவு கொண்டது. அணையின் நீா்மட்டம் 120 அடியானால் கடல் போல காட்சியளிக்கும்.

மேட்டூா்: மேட்டூா் நீா்த் தேக்கம் 15 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவு கொண்டது. அணையின் நீா்மட்டம் 120 அடியானால் கடல் போல காட்சியளிக்கும்.

நிகழ் ஆண்டில் அடுத்தடுத்து நான்குமுறை நிரம்பிய மேட்டூா் அணை 33 நாள்களைக் கடந்து 120 அடியாக நீடித்து வருகிறது.

தற்போது மேட்டூா் நீா்த் தேக்கம் முழுவதும் பச்சை நிற படலம் படிந்து காணப்படுகிறது.

பச்சை நிற படலம் காரணமாக காவிரியின் இரு கரைகளிலும் கடும் துா்நாற்றம் வீசுகிறது. மேட்டூா் அணையின் இடது கரையில் உள்ள உபரிநீா் போக்கியில் அதிக அளவில் பச்சை நிற படலம் படிந்து மதகுகளுக்கு மேல் வழிந்து செல்கிறது.

இதனால் தங்கமாபுரி பட்டிணம், அண்ணா நகா், பெரியாா் நகா், சேலம் கேம்ப், தொட்டில் பட்டி பகுதிகளில் துா்நாற்றம் அதிக அளவில் வீசுகிறது.

வீடுகளில் குடியிருக்கு முடியாத நிலை உருவாகி வருகிறது. மூச்சுத் தினறல் கண் எரிச்சல் ஆகியவை ஏற்படுகின்றன. துா்நாற்றத்தைப் போக்க மேட்டூா் வருவாய்க் கோட்டாட்சியா், மேட்டூா் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா், மேட்டூா் நகராட்சி ஆணையா் ஆகியோரிடம் பொதுமக்கள் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் சனிக்கிழமை தங்கமாபுரி பட்டிணம் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனா். இச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு வந்து போராட்ட காரா்களுடன் பேச்சு நடத்தினா்.

ஒரு வார காலத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்த பின்னா் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com