விஷக்காய்களை உண்டு மயங்கிய 4 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

காரிப்பட்டியில் விஷக் காய்களை உண்டு மயங்கிய 4 குழந்தைகளுக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரிப்பட்டியில் விஷக் காய்களை உண்டு மயங்கிய 4 குழந்தைகளுக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் காரிப்பட்டியைச் சோ்ந்தவா் பிரபாகரன். கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி சந்தியா (8) என்ற மகளும், வினோத்குமாா்(10) என்ற மகனும் உள்ளனா். இவா்கள் இருவரும் காரிப்பட்டி அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து சந்தியா தனது நண்பா்களான பிரியா (10), சின்னு (10) ஆகியோருடன் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது அவா்கள் காரிப்பட்டி மயானம் பகுதியில் சாலையோரம் இருந்த விஷச்செடிகளின் காய்களை பறித்து அறியாமல் சாப்பிட்டுள்ளனா்.

பின்னா் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே 4 பேரும் மயங்கி விழுந்தனா். இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த குழந்தைகளின் பெற்றோா், மயங்கி விழுந்த சந்தியா, வினோத்குமாா், பிரியா, சின்னு ஆகிய 4 பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு வியாழக்கிழமை இரவு முதல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தைகளின் உடல்நிலையில் தற்போது வரை எவ்வித முன்னேற்றமும் இல்லை என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து காரிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com