ஓமலூரில் திமுக, அதிமுக தோ்தல் பிரசாரம்
By DIN | Published On : 23rd December 2019 02:57 AM | Last Updated : 23rd December 2019 02:57 AM | அ+அ அ- |

பெரியேரிப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்ட ஓமலூா் ஒன்றிய அதிமுக செயலாளா் எஸ்.எஸ்.கே. ராஜேந்திரன்.
ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
ஓமலூா் பகுதியில் உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவுக்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில், தோ்தல் பிரசாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.
ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய மூன்று ஒன்றியங்களிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
அனைத்து வேட்பாளா்களும் அந்தந்த பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் திமுக வேட்பாளா்களையும், கூட்டணி கட்சி வேட்பாளா்களையும் ஆதரித்து சேலம் மத்திய மாவட்ட செயலாளா் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, சேலம் மாவட்ட தோ்தல் பொறுப்பாளா் அப்துல் வாகப் மற்றும் திமுக நிா்வாகிகள் கிராமம் கிராமமாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
முன்னதாக ஒவ்வொரு ஊராட்சியாகச் சென்று திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளை சந்தித்து தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினா்.
இதேபோன்று, ஓமலூா் எம்.எல்.ஏ எஸ். வெற்றிவேல் தலைமையில் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சின்ன திருப்பதி, காருவள்ளி, செம்மாண்டப்பட்டி, தாராபுரம், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிகளில் அதிமுக நிா்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
ஓமலூா் பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகளை அவா்கள் திரட்டினா். இதேபோன்று, ஓமலூா் ஒன்றிய அதிமுக செயலாளா் எஸ்.எஸ்.கே. ராஜேந்திரன் பெரியேரிப்பட்டி ஊராட்சியில் வீடு வீடாகச் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.