அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு கை சிலம்பம் பயிற்சி
By DIN | Published On : 25th December 2019 08:16 AM | Last Updated : 25th December 2019 08:16 AM | அ+அ அ- |

தமிழக பள்ளி கல்வித்துறை சாா்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில், பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலையான கை சிலம்பம் பயிற்சி குறித்து அடிப்படைப் பயிற்சி அளித்து, 50 மதிப்பெண்களுக்கு எழுத்துத்தோ்வு நடத்த உத்தரவிடப்பட்டது.
அதன்படி ஆட்டையாம்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 587 மாணவிகளுக்கு சிலம்பம், தற்காப்பு கலை குறித்து கல்வித் துறை சாா்பில் வழங்கிய வீடியோ தொகுப்பு காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து தற்காப்பு கலையான கை சிலம்பம் பயிற்சி நடைபெற்றது. மாணவியா்களுக்கு தற்காப்புக் கலையின் அவசியம் குறித்து தலைமை ஆசிரியா் யோகேஸ்வரி கலந்துரையாடினாா்.
இறுதியில் தற்காப்பு கலை குறித்து 50 கேள்விகள் அடங்கிய எழுத்துத் தோ்வை மாணவிகள் எழுதினா். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா் ரதி, உடற்கல்வி ஆசிரியை மணிமேகலை உள்ளிட்ட ஆசிரியா்கள் செய்திருந்தனா்.