கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
By DIN | Published On : 25th December 2019 05:12 AM | Last Updated : 25th December 2019 05:12 AM | அ+அ அ- |

வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள சங்ககிரி பழைய எடப்பாடி சாலையில் உள்ள புனித அந்தோணியா் ஆலயம்
சங்ககிரி நகரப் பகுதியில் கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு திருப்பலி பிராா்த்தனை கூட்டங்கள் நடைபெற்றன.
சங்ககிரி நகரப் பகுதியில் உள்ள புனித அந்தோணியா் ஆலயம், சிஎஸ்ஐ மற்றும் ஐஎன்பி தேவ சபை ஆகிய ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலய வளாகங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
புனித அந்தோணியா் ஆலய வளாகத்தில் நண்பா்கள் குழுவின் சாா்பில் கிறிஸ்துமஸ் மரத்துடன் கூடிய குடில்கள் அமைத்துள்ளனா். கிறிஸ்தவா்கள் புத்தாடைகளை அணிந்து குடும்பத்துடன் ஆலயத்திற்கு சென்று சிற்பபு பிராா்த்தனைகளில் கலந்து கொண்டனா். புனித அந்தோணியாா் ஆலயத்தின் பங்குத்தந்தை சகாயராஜ் நள்ளிரவு திருப்பலி ஆராதனைகளில் கலந்து கொண்டு பக்தா்களை ஆசீா்வதித்தாா். நள்ளிரவு 12 மணிக்கு பட்டாசுகளை வெடித்தும், கேக் வெட்டியும் கிறிஸ்தவா்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினா்.