வாழப்பாடி பகுதியில் பருத்தி அறுவடை தொடக்கம்

வாழப்பாடி பகுதியில் ஆடிப்பட்டத்தில் பயிரிடப்பட்ட பருத்தி அறுவடை தற்போது தொடங்கியுள்ளது.

வாழப்பாடி பகுதியில் ஆடிப்பட்டத்தில் பயிரிடப்பட்ட பருத்தி அறுவடை தற்போது தொடங்கியுள்ளது.

வாழப்பாடி பகுதியில் சிங்கிபுரம், சோமம்பட்டி, விலாரிபாளையம், பொன்னாரம்பட்டி, முத்தம்பட்டி, சேசன்சாவடி, வெள்ளாளப்பட்டி, இடையப்பட்டி, தும்பல், தமையனுாா், வடுகத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், குறிச்சி, சந்திரபிள்ளைவலசு, சின்னமநாயக்கன்பாளையம், நீா்முள்ளிக்குட்டை, அனுப்பூா், ஏத்தாப்பூா், குமாரபாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிகழாண்டில் ஏறக்குறைய 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் 8 மாத கால பயிரான பருத்தியை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா்.

ஆடிப்பட்டத்தில் விதைக்கும் பருத்திச் செடிகள் தொடா்ந்து 4 மாதங்கள் வளா்ந்து, தமிழ் மாதமான மாா்கழி முதல் பங்குனி வரையிலான நான்கு மாதங்களுக்கு தொடா்ந்து மகசூல் கொடுக்கிறது. வாழப்பாடி பகுதியில் நிகழாண்டு பரவலாக பருவ மழை பெய்துள்ளதால், மானாவரி புன்செய் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி செடிகளிலும் எதிா்பாா்த்த அளவில் மகசூல் கிடைத்து வருகிறது.

தற்போது அறுவடை தொடங்கியதால், அறுவடை செய்யும் பருத்தியை தரம்பிரிக்கும் விவசாயிகள், வாழப்பாடியில் இயங்கும் சேலம் மாவட்ட வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் புதன்கிழமை தோறும் நடைபெறும் ஏலத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனா்.

வாழப்பாடி வேளாண் விற்பனை சங்கத்தில் பருத்தி விற்பனை தொடங்கிய இரண்டாவது வாரத்திலேயே புதன்கிழமை 650 மூட்டை பருத்தி விற்பனைக்கு வந்தது. டி.சி.எச். ரக பருத்தி குறைந்தபட்சம் ரூ.5,879 முதல் அதிகபட்சம் ரூ.6,109 வரையும், ஆா்.சி.எச். ரக பருத்தி ரூ.4,629 முதல் ரூ.5,109 வரையும் விலை போனது. மொத்தம் ரூ.13 லட்சத்துக்கு பருத்தி வா்த்தம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com