சுடச்சுட

  

  சேலம் சிறை தியாகிகள் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
   சேலம் மத்திய சிறையில் 1950-ஆம் வருடம் பிப்ரவரி 11-ஆம் தேதி அரசியல் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 22 கம்யூனிஸ்டுகளை சிறை நிர்வாகத்தினர் சுட்டுத் தள்ளினர்.
   அதன் நினைவு தினம் மத்திய சிறை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
   முன்னதாக சேலம் மத்திய சிறை முன்பு உள்ள கொடிக் கம்பத்தில் சேலம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் பி. தர்மலிங்கம் செங்கொடியை ஏற்றி வைத்தார்.
   நிகழ்ச்சிக்கு மாநகரச் செயலாளர் எம். முருகேசன் தலைமை வகித்தார். மத்திய சிறையிலிருந்து சேலம் சிறைத் தியாகிகள் நினைவகம் வரை ஜோதி பயணம் நடைபெற்றது. பின்பு சிறை தியாகிகள் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
   கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். சேதுமாதவன் உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி. செல்வ சிங், மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, டி.உதயகுமார், ஆர். குழந்தைவேல், ஏ.முருகேசன், ஆர்.தர்மலிங்கம், வி.கே.வெங்கடாசலம், எ.ராமமூர்த்தி, எஸ்.கே.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai