நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் இரு தனியார் நிறுவனங்களை அணுக வேண்டாம்: ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்

நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் நுண்ணீர் பாசனத் திட்டத்தை

நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் நுண்ணீர் பாசனத் திட்டத்தை சரியாக பயன்படுத்தாத எவர்கிரீன் இர்ரிகேசன் மற்றும் பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை அணுக வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
 சேலத்தில் பாசன நீரை சேமிக்க உதவும் நுண்ணீர் பாசனத் திட்டம் தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 இதுகுறித்து ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்ததாவது:
 நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும்
 வழங்கப்படுகிறது.
 விவசாயிகள் செலுத்த வேண்டிய நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. நுண்ணீர் பாசனத் திட்டம் தமிழகத்தில் 2018-19-ஆம் ஆண்டில் ரூ. 1671.15 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2.55 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 சேலம் மாவட்டத்தில் ரூ. 126.82 கோடி நிதி ஒதுக்கீட்டில் 16 ஆயிரத்து 933 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக் கலை மற்றும் வேளாண் பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு வருகிறது.
 தமிழகத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிப்பதற்காக வேளாண் உற்பத்தியாளர் மற்றும் முதன்மைச் செயலரின் தலைமையில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
 ஆய்வுக் கூட்டத்தில் நுண்ணீர் பாசன நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள்.
 தமிழகத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு தோட்டக் கலை வளர்ச்சி முகமையால் 41 நுண்ணீர் பாசன நிறுவனங்கள்
 அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
 அவற்றில் எவர்கிரீன் இர்ரிகேசன் மற்றும் பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு நுண்ணீர் பாசன நிறுவனங்களும் நுண்ணீர் பாசனம்
 அமைப்பதற்கு எவ்வித பணிகளையும் மேற்கொள்ளவில்லை.
 எனவே, அந்நிறுவனங்களுக்கு குறிப்பிடும்படி முன்னேற்றம் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும், அந்நிறுவனங்கள் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காத காரணத்தினால், மாநில அளவிலான ஒப்புதல் குழுவின் அனுமதியுடன் அந்நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் அளிக்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 எனவே, நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும்
 விவசாயிகள் எவர்கிரீன் இர்ரிகேசன் மற்றும் பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை அணுக வேண்டாம் என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com