சுடச்சுட

  

  மாநில அளவிலான கராத்தே தற்காப்புக்கலை போட்டியில் சாதனை படைத்த வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி கலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
  அண்மையில் சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் இப்பள்ளி மாணவ-மாணவியர் பங்கேற்று, பல்வேறு நிலைகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்று சாதனை படைத்தனர். இந்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளர் எஸ்.எஸ்.சதீஷ்குமார், நிர்வாக மேலாளர் சுசீந்திரன், முதல்வர் பையாங்குட்டி, கராத்தே பயிற்சியாளர் சதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவியருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai