சுடச்சுட

  

  தளவாய்ப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் அறிவியல் விஞ்ஞானி சார்லஸ் டார்வின் பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
  சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்குள்பட்ட தளவாய்ப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், அறிவியல் விஞ்ஞானி சார்லஸ் டார்வின் பிறந்த நாள் தலைமையாசிரியர் இரா.தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் இயக்க சேலம் மாவட்டத் தலைவர் தி.ஜெயமுருகன் கலந்துகொண்டு, சார்லஸ் டார்வின் குறித்த வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார். 
  மேலும், அவருடைய இளமைக் காலம், கல்வி, கடல் ஆராய்ச்சி போன்றவைகளை விளக்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai