சுடச்சுட

    

    சேலம் அருகே ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 15 பேர் படு காயம்

    By DIN  |   Published on : 13th February 2019 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே 30 அடி பள்ளத்தில் தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் 15 படுகாயமடைந்துள்ளனர்.

    பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி  சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து சேலம் கொண்டாலம்பட்டி அருகே உள்ள பாலத்தில் வந்த போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் விழுந்தது.

    இதனால் பேருந்தில் பயணம் செய்த பணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து   படுகாயம் அடைந்த பணிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கிரேன்கள் மூலம் பள்ளத்தில் விழுந்த பேருந்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai