சுடச்சுட

  

  சங்ககிரியை அடுத்த நாரணப்பன்சாவடியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன கிளையின் சார்பில், டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு இலவச உடல் மற்றும் கண் பரிசோதனை முகாம் நிறுவன வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  முகாமை நிறுவன கிளையின் மூத்த மேலாளர் பரத்குமார் தொடக்கி வைத்து பேசினார். ஈரோடு தனியார் பொது மருத்துவமனை, கண் மருத்துவமனை மருத்துவர்கள், டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு  உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனைகளை செய்தனர். நிறுவனத்தின் பாதுகாப்பு மேலாளர் கோவிந்தராஜ், தொழிற்சங்க செயலர் அழகுராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai