சுடச்சுட

  

  லாரி மீது இருசக்கர வாகனங்கள் மோதல்: மாணவர் உள்பட 2 பேர் உயிரிழப்பு

  By DIN  |   Published on : 13th February 2019 10:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேலத்தில் சாலையில் திடீரென திரும்பிய லாரி மீது இருசக்கர வாகனங்கள் மோதியதில், பிளஸ் 2 மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
  சேலம் ராமகிருஷ்ணா சாலை சரஸ்வதி அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் மகன் பிரஜுனா (18). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
  இவர் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் சூரமங்கலத்தில் உள்ள டியூசன் சென்டருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஜங்சன் சாலையில் வேகமாக சென்ற போது, சுப்பிரமணிய நகர் பிரிவு அருகே சாலையின் மறுபுறத்தில் இருந்து கம்பி பாரம் ஏற்றிய லாரி திடீரென ஜங்சன் சாலைக்கு திரும்பியது. இதில், லாரியின் பின் சென்ற இருசக்கர வாகனம் மோதியதில், பிரஜுனா சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரின் மீது தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
  இந்நிலையில், பிரஜுனா வாகனத்துக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு இளைஞரும் லாரியின் மீது மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமுற்ற அவர், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
  விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். தகவலறிந்த சூரமங்கலம் காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று, உயிரிழந்த மாணவரின் உடலை
  மீட்டனர்.
  இதுகுறித்து ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், படுகாயமடைந்த நபர் ஈரோடு மாவட்டம், பாரிபாளையம் நேதாஜி நகரை சேர்ந்த குணசேகரன் மகன் லட்சுமணன் (24) என்பது தெரியவந்தது. பொறியியல் பட்டதாரியான இவர், சேலம் நகரிலுள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்ததும், ஜங்சனுக்கு வந்தபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும் வழியில் லட்சுமணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூரமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai