சுடச்சுட

  

  கெங்கவல்லி அருகே கடம்பூரில் குறைந்த செலவில் கால்நடை தீவன உற்பத்திக்கான அட்மா திட்டப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  வட்டார தொழில்நுட்ப மேலாளர் அற்புத வேலன் வரவேற்றார். 
  எம்எஸ்டிஏ குழுக்கள் நிறுவனமாக மாறுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும் வேளாண் உதவி இயக்குநர் சித்ரா விளக்கினார். கால்நடைகளுக்கான தீவன பராமரிப்பு முறைகள் குறித்தும், பசுந்தீவன உற்பத்தி முறைகள் குறித்தும் கால்நடை ஆய்வாளர் கோவிந்தன் பேசினார். பயிற்சியில் 40-க்கும்  மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். 
  பயிற்சி ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் மணிமாறன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சங்கர், மோகன்ராஜ் செய்திருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai