பிப்.18 முதல் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம்

அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வரும் பிப். 18-ஆம் தேதி முதல் 3 நாள்கள்

அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வரும் பிப். 18-ஆம் தேதி முதல் 3 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை
நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ச.பாலகுமார் செய்தியாளர்களிடம் கூறியது: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தின் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த டிசம்பர் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது, மத்திய அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை ஏற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைத்தோம். இந்த நிலையில், வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. மேலும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி கோபுரங்களை பராமரிக்க தனியாருக்கு அனுமதி வழங்கக் கூடாது. பி.எஸ்.என்.எல். நில மேலாண்மை கொள்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். மேலும், நிறுவனத்தின் சொத்துகளை மாற்றி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 18 ஆம் தேதி முதல் பிப். 20-ஆம் தேதி வரை 3 நாள்கள் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்தியா முழுவதும் 2 லட்சம் பேரும், சேலத்தில் 2 ஆயிரம் பேரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வர் என்றார்.
கூட்டத்தில், மாநில உதவித் தலைவர் வெங்கட்ராமன், மாவட்டச் செயலர் காமராஜ், நிர்வாகிகள் கண்ணையன், மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com