பெரியார் பல்கலை.யில் எம்.பில் பாடத்துக்கு சிறப்புத் தேர்வு: துணைவேந்தர் பொ. குழந்தைவேல்

பெரியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர் (எம். பில்) பாடம் பயின்று நிலுவைத் தாள்

பெரியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர் (எம். பில்) பாடம் பயின்று நிலுவைத் தாள் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடைபெற உள்ளதாக துணைவேந்தர் பொ. குழந்தைவேல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் முழுநேரம் பயின்ற ஆய்வியல் நிறைஞர் மாணாக்கர்கள், தங்களது படிப்பை மூன்று வருடத்துக்குள் முடிக்காமல் நிலுவைத்தாள் வைத்துள்ளவர்களுக்கும் மற்றும் பகுதி நேரம் பயின்ற ஆய்வியல் நிறைஞர் மாணாக்கர்கள் தங்களது படிப்பை நான்கு வருடத்துக்குள் முடிக்காமல் நிலுவைத் தாள் வைத்துள்ளவர்களுக்கும் சிறப்புத் தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி, இச் சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்கள் வழக்கமானத் தேர்வு கட்டணங்களுடன் ஒறுப்புக் கட்டணமாக (பெனால்டி) முழுநேர மாணாக்கர்களுக்கு ஒரு தாளுக்கு ரூ. 3 ஆயிரம் வீதமும் பகுதி நேர மாணாக்கர்களுக்கு  ஒரு தாளுக்கு ரூ. 4 ஆயிரம் வீதமும் செலுத்த வேண்டும். மேற்கண்ட மாணாக்கர்களின் தேர்வு ஏப்ரல் 2019-இல் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையில் தாங்கள் பயின்ற கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாகவும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வரும் 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com