வாழப்பாடி-பேளூர் சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

வாழப்பாடி-பேளூர் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி கடந்த ஐந்து மாதங்களுக்கு

வாழப்பாடி-பேளூர் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் அகற்றப்பட்ட வேகத் தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை.
இதனால், அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
வாழப்பாடியில் இருந்து பேளூர் வரையிலான ஏறக்குறைய 5 கி.மீ தூரத்துக்கு சாலை ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளதால் இச் சாலையில் செல்லும் வாகனங்களின் வேகம் குறைவதில்லை.
இச் சாலையில் அண்ணா நகர், பாட்டப்பன் கோவில் உள்ளிட்ட இடங்களில் வேகத் தடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்தன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இப்பகுதிக்கு வருகையொட்டி  வேகத்தடைகள் அகற்றப்பட்டன. அதன்பின் வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. எனவே, அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க வேண்டுமென வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு, அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com