முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
ஏற்காட்டில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மனு
By DIN | Published On : 28th February 2019 10:42 AM | Last Updated : 28th February 2019 10:42 AM | அ+அ அ- |

ஏற்காட்டில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
ஏற்காட்டில் லாங்கில் பேட்டை, ஜெரினாகாடு பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கட்டடத் தொழில் மற்றும் கூலித் தொழில் செய்து நூறு ஆண்டுகளுக்கும் மேல் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதிகளில் வீடுகள் விற்க, வாங்க மற்றும் சார் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய அனுமதி இருந்தும், மலைப்பகுதி பாதுகாப்புச் சட்டம் காரணமாக பட்டா வழங்க அரசு மறுக்கிறது.
எனவே, இப்பகுதிகளை ஆய்வு செய்து, லாங்கில் பேட்டை, ஜெரினாகாடு, முருகன் நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் வசித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும், வீடு இல்லாதவர்களுக்கு அரசு நிலம் ஒதுக்கி பட்டா வழங்க வேண்டும் எனவும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் நேரு தலைமையில் கட்சி நிர்வாகிகள், சேலம் மாவட்டக் குழு உறுப்பினர் சேது மாதவன், குழந்தை வேலு, பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் அப்பகுதி மக்கள் ஏற்காடு வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.