முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சங்ககிரி வட்டாட்சியர் பணியிட மாற்றம்
By DIN | Published On : 28th February 2019 10:43 AM | Last Updated : 28th February 2019 10:43 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டாட்சியர் பதவி ஏற்ற மூன்று மாதங்களுக்குள் மீண்டும் பழைய இடத்துக்கே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஓமலூர்-மேட்டூர் அகல ரயில்பாதை திட்ட (நிலம் எடுப்பு) தனி வட்டாட்சியராக பணியாற்றி வந்த கே.அருள்குமார் சங்ககிரி வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு புதன்கிழமை பதவியேற்றார். சங்ககிரி வட்டாட்சியர் சி.ரவிச்சந்திரன் ஓமலூர்-மேட்டூர் அகல ரயில்பாதை திட்ட (நிலம் எடுப்பு) தனி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்பே இப்பணியில் இருந்து சங்ககிரி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு சங்ககிரி வட்டாட்சியராக கடந்த 2018 நவ. 2 முதல் 2019 பிப். 26 வரை பணியாற்றினார்.
தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு சங்ககிரி வட்டாட்சியராக பொறுப்பேற்ற கே.அருள்குமார் சங்ககிரி வட்டாட்சியராக கடந்த 2017 செப். 10 முதல் 2018 நவ. 1 வரை பணியாற்றியுள்ளார். இவர் மீண்டும் சங்ககிரி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக பதவியேற்ற இவருக்கு துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.